1.
டிக் டிக்
யாரது?
திருடன்
என்ன வேண்டும்?
நகை வேண்டும்
என்ன நகை
கலர் நகை
என்ன கலர்?
(ஏதோ ஒரு கலர் பதிலாக வரும்போது எல்லாரும் அந்த நிறத்தைத் தேடி ஓடித் தொட்டுக்கொண்டிருப்பர். அப்படித் தொட முடியாதவரை வந்து அவுட் ஆக்குவார் திருடன்).
2.
உங்கப்பா எங்கப்பா தகர டப்பா!
உங்கம்மா எங்கம்மா மனோரம்மா!
உங்கண்ணன் எங்கண்ணன் கமலக்கண்ணன்!
உங்கண்ணி எங்கண்ணி தேங்கா தண்ணி!
உங்கத்தை எங்கத்தை தேங்கா பத்தை!
3.
லாபா சீட்
அஞ்சு ரூபா நோட்
பொட்டில வச்சி பூட்
கல்லா? மண்ணா?
கல்லு
கல்லுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
மண்ணு
மண்ணுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
4.
கொக்கு பறபற
கோழி பறபற
மைனா பறபற
அம்மி பறபற
பட்டம் பறபற
குண்டான் பறபற
....
....
(பறக்காத பொருளுக்குக் கையசைப்பவரும், பறக்கும் பொருளுக்குக்
கையசைக்காதவரும் அவுட்).
குலை குலையா முந்திரிக்காய்
ReplyDeleteநிறைய நிறைய சுத்தி வா
ஓட்டு மேல ஏறுவேன்
ஈட்டியாலக் குத்துவேன்
பச்சரிசி திம்பேன்
பல்ல உடைப்பேன்
புழுங்கலரிசி திம்பேன்
புதுப்பல்ல உடைப்பேன்
ஓட்டு மேல காக்கா..
-மறந்து போயிடுச்சு :)
அடடா! அருமை...! நன்றி
ReplyDelete